அ.தி.மு.க. வெற்றியை யாராலும் தடுக்க முடியாது; ஈரோட்டில் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பேட்டி


அ.தி.மு.க. வெற்றியை யாராலும் தடுக்க முடியாது; ஈரோட்டில் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பேட்டி
x

அ.தி.மு.க. வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று ஈரோட்டில் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கூறினார்.

ஈரோடு

அ.தி.மு.க. வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று ஈரோட்டில் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கூறினார்.

பிரசாரம் தொடங்கியது

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் கே.எஸ்.தென்னரசு மணல்மேடு பகுதியில் நேற்று தனது பிரசாரத்தை தொடங்கினார். அவருக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையின்படி முதல்கட்ட தேர்தல் பிரசாரம் ஆலய வழிபாட்டோடு தொடங்கப்பட்டு உள்ளது. தொடக்க நாளிலேயே குபேர மூலையில் பிரசாரம் தொடங்கப்பட்டது. குபேர மூலை என்றாலே செல்வத்தை பெருக்குவதும், வெற்றியை பெருக்குவதுமாகும்.

வரலாறு படைப்போம்

திண்டுக்கல் இடைத்தேர்தலைபோல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றியை பெறும். நாளை (வியாழக்கிழமை) வேட்பாளர் அறிமுக கூட்டம் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. அ.தி.மு.க. வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. இடைத்தேர்தலில் வரலாற்றை படைப்போம். இரட்டை இலை என்றாலே வெற்றி என்பார்கள். ஒற்றுமை உணர்வோடு பணியாற்றி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பிரசாரத்தின்போது முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம், அ.தி.மு.க. பகுதி செயலாளர் பெரியார்நகர் மனோகரன், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் தங்கமுத்து, தமிழ் மாநில காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், இளைஞர் அணி மாநில தலைவர் யுவராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story