ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க.வினர் தீவிர வாக்கு சேகரிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க.வினர் தீவிர வாக்கு சேகரிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அமைச்சர்கள் மற்றும் தி.மு.க., காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்து வருகிறார்கள்.
அதன்படி நேற்று ஈரோடு மாநகராட்சி 37-வது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தி.மு.க.வினர் வீடு, வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி கூறியும், துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்தும் கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ராமஜெயம், ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளர் நவீன் குமார், உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, கூட்டுறவு சங்கத்தலைவர் அஸ்ஸாப் கல்லாசி, ஆவின் தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் வேலம்மாள், மாணவர் அணி மாவட்ட செயலாளர் அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.