வாக்காளர்கள் பெயர்-சின்னம் பொருத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மாதிரி ஓட்டுப்பதிவு
வாக்காளர்கள் பெயர்-சின்னம் பொருத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் நேற்று மாதிரி வாக்குப்பதிவு நடந்தது.
வாக்காளர்கள் பெயர்-சின்னம் பொருத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் நேற்று மாதிரி வாக்குப்பதிவு நடந்தது.
77 வேட்பாளர்கள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கிழக்கு தொகுதியில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. காங்கிரஸ், அ.தி.மு.க., தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி சுயேச்சைகள் என 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தலா 16 வாக்காளர்களின் பெயர், சின்னம் பொருத்தலாம்.
இவ்வாறாக நோட்டாவுடன் சேர்த்து, 78 பதிவுக்கு இடம் ஒதுக்கப்படும். இதனால் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும், 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், 1 கட்டுப்பாட்டு எந்திரம், 1 வி.வி.பேட் பயன்படுத்தப்பட உள்ளது. அதன்படி 286 கட்டுப்பாட்டு கருவி, 310 வி.வி.பேட், 1,144 மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்படுகிறது.
மாதிரி வாக்குப்பதிவு
அவசிய பயன்பாட்டுக்காக மொத்தம் 1,430 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இந்த எந்திரங்களில், கடந்த 18-ந்தேதி முதல் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி நடந்தது. 77 இடங்களில் வேட்பாளர் பெயர் சின்னமும், 78-வது இடத்தில் நோட்டாவும், அதற்கான சின்னம் உள்ள இடத்தில் வெள்ளை நிறமாகவும் விடப்படும். 79, 80 ஆகிய இடங்களில் அழுத்த முடியாத பொத்தான் பொருத்தப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு ரவுண்டிலும் தலா 20 வாக்குச்சாவடிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்திலும், பேலட் ஷீட் ஒட்டப்பட்டது. இந்த பணி நேற்று நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து அரசியல் கட்சி வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள், வாக்குப்பதிவு எந்திரங்கள் சரியாக இயங்குகிறதா? என்பதை பரிசோதிக்கும் வகையில் தங்கள் கட்சி வேட்பாளர்கள் சின்னத்துக்கு மாதிரி வாக்கு பதிவு போட்டு சரி பார்த்தனர். ஒவ்வொரு சுயேச்சை வேட்பாளர்கள். அவர்களது முகவர்கள் வாக்குப்பதிவு எந்திரங்களில் ஓட்டுப்போட்டு சரி பார்த்தனர்.