ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒயிலாட்டம் ஆடி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒயிலாட்டம் ஆடி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
ஈரோடு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் திண்ணை பிரச்சாரம் செய்தும், வாக்காளர்களுக்கு டீ போட்டு கொடுத்தும் நூதன முறையில் வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஈரோடு கிழக்கு தொகுதியில் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் ஈரோடு வீரப்பன்சத்திரம் ஜான்சி நகரில், கொங்கு ஒயிலாட்டம் ஆடி வாக்கு சேகரித்தார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story