ஈரோட்டில் துணை ராணுவம்-போலீசார் கொடி அணிவகுப்பு
ஈரோட்டில் துணை ராணுவம்-போலீசார் கொடி அணிவகுப்பு
ஈரோடு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக துணை ராணுவத்தினர் ஈரோட்டுக்கு வந்து உள்ளனர். அவர்கள் வாகன சோதனை மற்றும் பிரச்சினை ஏற்படும் பதற்றமான இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் துணை ராணுவத்தினர், போலீசாரின் கொடி அணிவகுப்பு ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. ஈரோடு நெரிக்கல் மேடு பகுதியில் தொடங்கிய அணிவகுப்பு 16 ரோடு, சத்திரோடு, வீரப்பன்சத்திரம், தெப்பக்குளம், காவிரி ரோடு ஆகிய பகுதிகள் வழியாக சென்றது. இதில் 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், ரெயில்வே பாதுகாப்பு சிறப்பு படையை சேர்ந்த 24 பேர், துணை ராணுவத்தினர் 8 பேர் ஆகியோர் அணிவகுத்து சென்றார்கள்.
Related Tags :
Next Story