அருள்வேலவன் நகரில் முன்னாள் அமைச்சர் காமராஜ் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பு
அருள்வேலவன் நகரில் முன்னாள் அமைச்சர் காமராஜ் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் கே.எஸ்.தென்னரசை ஆதரித்து முன்னாள் அமைச்சர் காமராஜ், ஈரோடு கிழக்கு தொகுதியில் பல்வேறு இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்து வருகிறார். அதன்படி நேற்று ஈரோடு மாநகராட்சி 6-வது வார்டுக்கு உட்பட்ட அருள்வேலவன் நகர், பாரதி நகர், பச்சப்பாளி ரோடு, ஞானபுரம், காந்திநகர், பனங்குட்டை, எம்.ஜி.ஆர். நகர், பூம்புகார் நகர், காமராஜ் நகர், சுண்ணாம்பு ஓடை, தண்ணீர் பந்தல் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் காமராஜ், வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுடன் சேர்ந்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது பெண்கள் அவர்களுக்கு ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் உற்சாகமாக வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிச்சாமி, பகுதி செயலாளர் ராமசாமி, தொழில் வர்த்தக சபை துணைத்தலைவர் வெஸ்பா குணசேகரன், முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் முனியப்பன், அக்ரஹாரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் கருப்பண்ணன், மீனவர் பிரிவு மாநில இணைச்செயலாளர் கே.ஏ.ஜெயபால், ஜெயலலிதா பேரவை மாநில இணைச்செயலாளர் காந்தி, அமைப்பு செயலாளர் சிவ ராஜமாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அருள்வேலவன்நகர் செல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுக்கும், முன்னாள் அமைச்சர் காமராஜுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுக்கு அருள் வேலவன் நகர் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து பூ தூவி வரவேற்றனர்.