தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை; ஈரோட்டில் நடிகை விந்தியா பேச்சு


தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை; ஈரோட்டில் நடிகை விந்தியா பேச்சு
x

தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஈரோட்டில் நடிகை விந்தியா கூறினார்.

ஈரோடு

தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஈரோட்டில் நடிகை விந்தியா கூறினார்.

பெரியார் மண்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுக்கு ஆதரவு தெரிவித்து நடிகை விந்தியா ஈரோட்டில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் கருங்கல்பாளையம் குயிலன்தோப்பு, கிருஷ்ணம்பாளையம், கனிராவுத்தர்குளம் ஆகிய பகுதிகளில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு பெரியாரின் மண். அவர் பகுத்தறிவு பெற்றவர். ஆனால் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சந்தர்ப்பவாதி.

பாதுகாப்பு இல்லை

தமிழகத்தில் எத்தனையோ பிரச்சினை இருக்கும்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு செய்வது தேவையானதா? திருவண்ணாமலையில் ஏ.டி.எம். கொள்ளை, வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கழித்த பிரச்சினை, கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் கொலை, கோவை, தென்காசியில் கொலை என சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு உள்ளது. 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தது. ஆனால் தற்போது மக்களுக்கு பாதுகாப்பும் இல்லை. நிம்மதியும் இல்லை.

திருத்த முடியும்

ஒரு செங்கலை தூக்கி கொண்டு வந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். மதுரையில் கட்டப்படும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கும், ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றால்தான் இந்த அரசை திருத்த முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்


Next Story