ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு கேட்டு வடை சுட்டு கொடுத்து வாக்கு சேகரித்த அமைச்சர்-எம்.எல்.ஏ.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு கேட்டு வடை சுட்டு கொடுத்து வாக்கு சேகரித்த அமைச்சர்-எம்.எல்.ஏ.
x

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு கேட்டு வடை சுட்டு கொடுத்து வாக்கு சேகரித்த அமைச்சர்-எம்.எல்.ஏ.

ஈரோடு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பே௱ட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு கேட்டு ஈரோடு திருநகர்காலனியில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு உணவகத்துக்கு சென்ற அமைச்சர் பரோட்டா போட்டு கொடுத்து கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். மேலும், சாலையோரமாக உள்ள ஒரு வடை கடைக்கு சென்ற அமைச்சர் கா.ராமச்சந்திரன், செல்வராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் வடை சுட்டு கொடுத்து ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இந்த பிரசாரத்தின்போது திருப்பூர் மாநகர செயலாளர் நாகராஜ், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் இளங்கோ, பகுதி செயலாளர் ராமச்சந்திரன், கவுன்சிலர் ஜெயந்தி, வார்டு செயலாளர் பாலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story