சி.ஏ., சி.எம்.ஏ. படிப்புக்கான சிறப்பு பயிற்சி
ஆற்காடு மகாலட்சுமி மெட்ரிக் பள்ளியில் சி.ஏ., சி.எம்.ஏ. படிப்புக்கான சிறப்பு பயிற்சி நடந்தது.
ஆற்காட்டை அடுத்த விளாப்பாக்கத்தில் உள்ள ஆற்காடு மகாலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சி.ஏ., சி.எம்.ஏ. படிப்புகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடந்தது. லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் பாலாஜி லோகநாதன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஆடிட்டர் ராஜவேல் கலந்து கொண்டு, பயிற்சி வகுப்பினை நடத்தினார். அப்போது அவர் பேசுகையில் இன்றைய காலகட்டத்தில் கணக்கியல் மற்றும் தணிக்கை துறையில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. ஆடிட்டர் படிப்புகளை பயின்று தேர்ச்சி பெறுவதற்கு நீண்டகால கடின உழைப்பு தேவை. இப்போது இருந்தே பயிற்சி எடுத்தால் எளிதில் வெற்றி பெறலாம் என்றார்.
நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் ஜாய்ஸ் இன்பகுமாரி, இயக்குனர் என்.கோமதி மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை செயலாளர் சாந்தி பாலாஜி, தாளாளர் பா.கோமதி, இணைச் செயலாளர் வைஷ்ணவி ஆகியோர் செய்திருந்தனர்.