அரக்கோணம் பகுதியில் கேபிள் டி.வி. ஒளிபரப்பு தடைப்படுகிறது


அரக்கோணம் பகுதியில் கேபிள் டி.வி. ஒளிபரப்பு தடைப்படுகிறது
x

சென்னை-கன்னியாகுமரி சாலை பணியால் அரக்கோணம் பகுதியில் கேபிள் டி.வி. ஒளிபரப்பு தடைப்படுகிறது என பொது மேலாளரிடம் மனு

ராணிப்பேட்டை

அரக்கோணம்

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. அலுவலகத்தில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் குறைதீர்க்கும் கூட்டம் பொது மேலாளர் (இயக்கம்) அஜய் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் அரக்கோணத்தை சேர்ந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கலந்துகொண்டு பேசுகையில், 'அரக்கோணம் பகுதியில் சென்னை-கன்னியாகுமரி தொழில் மேம்பாட்டு சாலை பணி நடைபெறுகிறது. இதனால் தினமும் 3 மணி நேரத்திற்கு மேலாக கேபிள் டி.வி. ஒளிபரப்பு தடைப்படுகிறது. மேலும் சிக்னல் கோளாறு ஏற்படுகிறது' என்றனர்.

பின்னர் அவர்கள் அதனை கோரிக்கை மனுவாக பொது மேலாளர் அஜய் சீனிவாசனிடம் கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட பொது மேலாளர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

அப்போது வேலூர் மண்டல அரசு கேபிள் டி.வி. தனி வட்டாட்சியர் பி.எஸ்.பத்மநாபன், தொழில்நுட்ப உதவியாளர் கே.எம்.முத்துக்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

----


Next Story