கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சங்க கூட்டம்
கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சங்க கூட்டம் நடந்தது.
தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொது நலச்சங்கத்தின் பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூர் ஆகிய தாலுகாக்களின் நிர்வாகிகள் கூட்டம் பெரம்பலூரில் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் அருள்ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் நல்லுசாமி, பொருளாளர் ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாநில துணைத்தலைவர் தாமோதரன், துணை செயலாளர் கந்தன், செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சங்கத்தின் கோரிக்கைகளை விளக்கி பேசினர். கூட்டத்தில் வருகிற செப்டம்பர் மாதம் சங்கத்தின் மாவட்ட மாநாடு பெரம்பலூர் பகுதியில் நடத்தப்படும். வருகிற டிசம்பர் மாதம் பல்வேறு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பிரச்சினைகளை ஆலோசிக்கவும், களையவும் நடைபெற உள்ள மாநில பொதுக்குழுவில் விவாதிக்க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். திரும்பப்பெற முடியாத செட் ஆப் பாக்ஸ் நிலுவை தொகை, மேலும் டிஜிட்டல் நிலுவை தொகை ஆகியவற்றை வசூலிப்பதில் இருந்து தற்காலிக தடை ஆணையினை சென்னை உயர்நீதிமன்றத்தில் பெற்றுள்ளோம். அதனை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று முழுமையான தள்ளுபடி பெறுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.