கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்


கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்
x

தூத்துக்குடியில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

தமிழ்நாடு கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் பொதுநலசங்கம் சார்பில் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராஜேந்திர பிரபு தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ராஜூ முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், கட்டண தொலைக்காட்சி சேனல்களில் விலை உயர்வு காரணமாக வருகிற மார்ச் 1-ந் தேதி முதல் முதல் கேபிள் டி.வி மாத கட்டணம் சுமார் ரூ.300-ல் இருந்து, ரூ.500 வரை உயர வாய்ப்பு உள்ளது. எனவே, கட்டண தொலைக்காட்சி சேனல்களின் விலை உயர்வை திரும்ப பெறவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story