தாளவாடி அருகே சிறுத்தையை பிடிக்க கல்குவாரியில் கூண்டு அமைப்பு


தாளவாடி அருகே  சிறுத்தையை பிடிக்க கல்குவாரியில் கூண்டு அமைப்பு
x

கல்குவாரியில் கூண்டு அமைப்பு

ஈரோடு

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட தாளவாடி வனச்சரகத்தில் அமைந்துள்ளது தொட்டகாஜனூர், பீம்ராஜ்நகர், சூசைபுரம், ஓசூர், சேஷன்நகர். இப்பகுதியில் விவசாயிகள் ஏராளமானோர் உள்ளனர். கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை, புலிகள் இங்கு உள்ள பகுதிகளுக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஓசூர் கிராமத்தில் உள்ள கல்குவாரி அருகே பசு மாடு சிறுத்தை தாக்கி பலியானது. இதைத்தொடர்ந்து நேற்று தாளவாடி வனச்சரகர் சதீஷ் தலைமையில் வனத்துறையினர் கல்குவாரிக்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் டிரோன் கேமரா மூலம் கல்குவாரியை சுற்றி சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என கண்காணித்தனர். அதைத்தொடர்ந்து கல்குவாரி உரிமையாளரிடம் அங்குள்ள புதர்களை அகற்ற வேண்டு்ம் என கூறினார்கள். இதையடுத்து சிறுத்தையை பிடிக்க கல்குவாரியில் வனத்துறையினர் கூண்டும், கூண்டு உள்ளே இறைச்சியையும் போட்டு வைத்தனர். இறச்சியை உண்ண வரும் சிறுத்தை கூண்டில் சிக்கும் என வனத்துறை தெரிவித்தனர். மேலும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் கல்குவாரி அருகே செல்ல வேண்டாம் என வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Next Story