வெள்ளித்திருப்பூர் அருகே சிறுத்தைப்புலியை பிடிக்க கூண்டு அமைப்பு


வெள்ளித்திருப்பூர் அருகே  சிறுத்தைப்புலியை பிடிக்க கூண்டு அமைப்பு
x

வெள்ளித்திருப்பூர் அருகே சிறுத்தைப்புலியை பிடிக்க கூண்டு அமைக்கப்பட்டது.

ஈரோடு

அம்மாபேட்டை

அம்மாபேட்டை அருகே உள்ள வெள்ளித்திருப்பூர் குரும்பனூர்காடு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. விவசாயி. இவர் தான் வளர்த்து வரும் ஆடுகளை இரவு நேரங்களில் வீட்டின் அருகே கட்டி வைத்திருப்பது வழக்கம். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் சென்னம்பட்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தைப்புலி பழனிசாமி வீட்டின் அருகே கட்டியிருந்த 2 ஆடுகளை கடித்து கொன்று விட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சென்னம்பட்டி வனத்துறையினர் அங்கு சென்று பதிவாகியிருந்த கால்தடங்களை ஆய்வு செய்தனர். அப்போது ஆடுகளை வேட்டையாடியது சிறுத்தைப்புலி என்று உறுதியானது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

மேலும் சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று வனத்துறையினர் குரும்பனூர்காடு பகுதியில் சிறுத்தைப்புலியை பிடிக்க கூண்டு அமைத்துள்ளனர்.


Related Tags :
Next Story