கல்குவாரி கண்டுபிடிப்பு; வெடிபொருட்கள் பறிமுதல்
கல்குவாரி கண்டுபிடிப்பு; வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை
கீரனூர்:
கீரனூர் அருகே பள்ளத்துப்பட்டி கிராமத்தில் அனுமதியின்றி அரசு புறம்போக்கு இடத்தில் கல் குவாரி இயங்குவதாக கீரனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அந்த பகுதிக்கு சென்ற போது கல்குவாரியில் இருந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர். பின்னர் அங்கு சோதனை நடத்தியபோது பாறைகளை உடைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட வெடிப்பொருட்களான ஜெலட்டின் குச்சி 78 பாக்கெட் மற்றும் ஜெலட்டின் குச்சி 11 வயர் 50 மீட்டர் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். பின்னர் விசாரணை நடத்தியதில் 1 ஏக்கர், 35 சென்ட் பரப்பளவு உள்ள பாறையில் வெடி மருந்துகள் வைத்து பாறைகளை தகர்த்து வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து வருவாய்த்துறையினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story