மக்கள் தொடர்பு திட்ட முகாம்


மக்கள் தொடர்பு திட்ட முகாம்
x

ஓசூர் அருகே எஸ்.முதுகானப்பள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது

கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூர் அருகே எஸ்.முதுகானப்பள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது இந்த முகாமிற்கு, சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் பாக்கியலட்சுமி தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். தொடர்ந்து 41 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகள் சார்பில் ரூ.2 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் தாசில்தார் கவாஸ்கர், வருவாய் ஆய்வாளர் சுதா, கிராம நிர்வாக அலுவலர் தம்பிதுரை மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story