நாமக்கல் அரசு பள்ளியில் புகையிலை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
நாமக்கல் அரசு பள்ளியில் புகையிலை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
நாமக்கல்
நாமக்கல்:
உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புகையிலை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்த முகாமுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பெரியண்ணன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட புகையிலை தடுப்பு ஆலோசகர் டாக்டர் லலிதா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி பேசினார்.
பின்னர் 'நான் ஒருபோதும் புகையிலை பிடிக்கவோ அல்லது புகையிலை பொருட்களை யாதொரு வடிவிலும் உட்கொள்ளவோ மாட்டேன்' என மாணவர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதில் உதவி தலைமை ஆசிரியர் ஜெகதீசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story