இளையான்குடியில் வேலைவாய்ப்பு முகாம்


இளையான்குடியில் வேலைவாய்ப்பு முகாம்
x
தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-24T00:15:24+05:30)

இளையான்குடியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

சிவகங்கை

இளையான்குடி,

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி இணைந்து மத்திய அரசின் வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு முகாமை நடத்தினர். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உதவி திட்ட அலுவலர் விஜய சங்கரி வரவேற்றார். கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி முகாமை தொடங்கி வைத்தார். 18 தனியார் நிறுவனங்கள் பங்கு பெற்று பணியாளர்களை தேர்ந்தெடுத்தனர். முகாமில் 350-க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டதில் 110 பேரை தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவன பணி நியமன ஆணைகளை வழங்கினர். முகாம் ஏற்பாடுகளை மகளிர் சுய உதவி குழு பணியாளர்களுடன், கல்லூரி வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் இப்ராஹிம், உதவி பேராசிரியர்கள் ஜெயமுருகன், சுல்தான் செய்யது இப்ராஹிம், மகேந்திரன், ஆரிப்ரகுமான் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வட்டார இயக்க மேலாளர் சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.Next Story