மக்கள் தொடர்பு முகாம்
மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.
கமுதி,
கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் தலைமை தாங்கினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் காசிநாதன், துணை தலைவர் பாலமுருகன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம் ராமநாதபுரம்) கந்தசாமி, கமுதி வட்டாட்சியர் சிக்கந்தர்பபிதா, சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் அமலோர் பவ ஜெயராணி, மண்டல துணை தாசில்தார்கள் முத்துராமலிங்கம், சம்பத், வட்ட வழங்கல் அலுவலர் ராமசுப்பிரமணியம், தேர்தல் துணை வட்டாட்சியர் சத்தியபாமா, வருவாய் ஆய்வாளர்கள் பஞ்சவர்ணம், வெண்ணிலா, கலாராணி, மணிவல்லவன், நாகநாதன், கிராம நிர்வாக அலுவலர் மாரீஸ்வரன் மற்றும் பல்வேறுதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முகாமில் மாற்றுத் திறனாளி உதவித் தொகை 12 பேருக்கு, ஆதரவற்ற உதவித்தொகை 12 பேருக்கு, இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை 19 பேருக்கு, இலவச வீட்டுமனை பட்டா என மொத்தம் ரூ.7 லட்சத்து 86 ஆயிரத்துக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.