நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்
நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
நாட்டரசன்கோட்டை கானாடுகாத்தான் முத்தையா சுப்பையா செட்டியார் அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பாக கீரங்குளத்துப்பட்டியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் 10 நாட்கள் நடைபெற்றது. இதையொட்டி அங்குள்ள சாலைகளை சுத்தப்படுத்துதல், பள்ளி வளாகத்தை தூய்மையாக்குதல் ஆகிய பணிகளை மாணவிகள் செய்தனர். அத்துடன் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு சென்று கையெழுத்து போட தெரியாத முதியவர்களுக்கு கையெழுத்து போட கற்று கொடுத்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) சண்முகநாதன், நேரு இளைஞர் மைய ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார், பள்ளி தலைமை ஆசிரியை மகாலட்சுமி, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சிவகாமி, உதவி திட்ட அலுவலர் அகிலாண்டேஸ்வரி, நாட்டு நலப்பணி திட்ட தொடர்பு அலுவலர் சீனி ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.