போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
சிவகங்கை
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் பாபா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் பாபாஅமீர்பாதுஷா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நகர் இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் மாணவர்களுக்கு போதை ஒழிப்பு குறித்து எடுத்துரைத்தார். போதை பொருட்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து இன்ஸ்பெக்டர் மாரிமுத்து எடுத்து கூறினார். தாலுகா உணவு பாதுகாப்பு அலுவலர் நாகநாதன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அய்யனார், அன்புக்குமரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக பள்ளி முதல்வர் வரதராஜன் வரவேற்றார். முடிவில் நிர்வாக அலுவலர் ஜெகநாதன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story