26, 27-ந் தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்


26, 27-ந் தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்
x
தினத்தந்தி 24 Nov 2022 12:15 AM IST (Updated: 24 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,371 வாக்குச்சாவடிகளிலும் வரும் 26, 27-ந் தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடத்தப்படும் என்று கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,371 வாக்குச்சாவடிகளிலும் வரும் 26, 27-ந் தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடத்தப்படும் என்று கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல்

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடந்து வருகிறது. சமீபத்திய நிலவரப்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் 59 சதவீதம் பேர் ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளனர். வாக்காளர் பதிவு அலுவலர்கள் வீடு, வீடாக சென்று ஆதார் விரவங்களை பெற்று "கருடா" செயலியில் பதிவு செய்து வருகின்றனர்.

இதனிடையே, தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, கடந்த 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அன்று முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2023 ஜனவரி 1-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்கள் தங்களை பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். இதற்கான படிவத்தை பெற்று பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் தாலுகா அலுவலகங்களில் உள்ள வாக்காளர் பதிவு அதிகாரியிடம் வழங்கலாம்.

சிறப்பு திருத்த முகாம்

தேசிய வாக்காளர் சேவை போர்ட்டல் https://www.nvsp.in அல்லது Voters helpline கைபேசி செயலி மூலமாகவும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். இதுதவிர, பெயர் நீக்கம், முகவரி மாற்றம், தொகுதிக்குள் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளையும் 8.12.22 வரை மேற்கொள்ளலாம். வேலைக்கு செல்வோரின் வசதிக்காக சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடத்த அறிவுறுத்தியதன்படி கடந்த நவம்பர் 12, 13-ந் தேதிகளில் சிறப்பு திருத்த முகாம் நடத்தப்பட்டன.

மேலும், மாவட்டத்தில் உள்ள 1371 வாக்குச்சாவடிகளிலும் வரும் 26, 27-ந் தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு, பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், திருத்தம் தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறலாம். இந்த தகவலை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story