பொம்மிடியில் மின் இணைப்புடன் ஆதார் இணைக்கும் சிறப்பு முகாம்
தர்மபுரி
பாப்பிரெட்டிப்பட்டி:
கடத்தூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட பொம்மிடி, முத்தம்பட்டி, கே.என்.புதூர் ஆகிய பகுதிகளில் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் நடந்தது. பொம்மிடி பஸ் நிலையம் அருகே நடந்த முகாமுக்கு கடத்தூர் கோட்ட செயற்பொறியாளர் ரவி தலைமை தாங்கினார். இதில் உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட மின்வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டு மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மின் இணைப்பு எண்ணுடன், ஆதாரை எண்ணை இணைப்பது குறித்து துண்டு பிரசுரங்கள் மற்றும் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Next Story