இலங்கை தமிழர்கள் முகாமில் குறைகேட்பு முகாம்
திருப்பூர்
அவினாசி பேரூராட்சியில் கைகாட்டிபுதூர் சந்தைப்பேட்டையில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் குறைகேட்பு முகாம்நடந்தது. வீடு பராமரித்தல், தெருவிளக்கு மற்றும் கழிப்பிட வசதி இலங்கை தமிழர்கள் மனு கொடுத்தனர். பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கணேசன் (பொறுப்பு) தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி முன்னிலை வகித்தார். இதில் அவினாசி தாசில்தார் ராஜேஷ், செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் சுகாதார ஆய்வாளர், வருவாய்த்துறை துணை ஆய்வாளர் உள்ளிட்ட அலுவலர்கள் அவர்களின் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனு பெற்றனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர்.
Next Story