அரூர் அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம்


அரூர் அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 2 Feb 2023 12:15 AM IST (Updated: 2 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

அரூர்:

அரூர் பாட்சாப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது. முகாமுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் கலந்து கொண்டு, முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார். முகாமில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. மேலும் தேசிய அடையாள அட்டை, 3 சக்கர வாகனம், பஸ் பயண அட்டை, ரெயில் பயண அட்டை ஆகியவை வழங்கப்பட்டன. பல்வேறு துறைகளை சேர்ந்த சிறப்பு டாக்டர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு சிகிச்சை அளித்து, ஆலோசனை வழங்கினர். இதில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் வேலவன், ஆசிரியர்கள் செந்தில், பழனி, கலையரசி, மகேந்திரன், ஜெயசங்கர், ஜோதி, ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story