சிவகங்கையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் 17-ந்தேதி நடக்கிறது
சிவகங்கையில், தனியார் வேலை வாய்ப்பு முகாம் வருகிற 17-ந்தேதி நடக்கிறது.
சிவகங்கை,
சிவகங்கையில், தனியார் வேலை வாய்ப்பு முகாம் வருகிற 17-ந்தேதி நடக்கிறது.
வேலை வாய்ப்பு முகாம்
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் வௌ்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில், சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாமில். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்த இளைஞா்்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி தங்களது கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார்அட்டையுடன் இம்முகாமில் கலந்து கொண்டு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினைப் பெறலாம்.
பதிவு மூப்பு ரத்து ஆகாது
இம்முகாமில் பணிவாய்ப்பு பெறுவோருக்கு பதிவு மூப்பு ஏதும் ரத்து செய்யப்பட மாட்டது மேலும், இந்த முகாமில் இலவச திறன்பயிற்சிக்கான விண்ணப்பப்படிவம், போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் மாணவர் சேர்க்கை, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பப்படிவம் ஆகியவையும் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.