செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம்


செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 15 Feb 2023 12:15 AM IST (Updated: 15 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

சிவகங்கை

திருப்பத்தூர்,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் சிவகங்கை மண்டல இணை இயக்குனர் டாக்டர் நாகநாதன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இன்று(புதன்கிழமை) காரைக்குடி அருகே கல்லல் முருகப்பா மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள சிவன் கோவில் மைதானத்தில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை வெறி நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Related Tags :
Next Story