பாப்பிரெட்டிப்பட்டி காவல்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்
தர்மபுரி
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முள்ளிக்காடு கிராமத்தில் போலீஸ் பாய்ஸ், போலீஸ் கேர்ள்ஸ் கிளப் தொடங்கப்பட்டது. இதையொட்டி பாப்பிரெட்டிப்பட்டி காவல்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரும், பாப்பிரெட்டிப்பட்டி பாய்ஸ் கிளப் மண்டல அலுவலருமான கருணாநிதி தலைமை தாங்கினார். பொம்மிடி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் வெங்கடாசலம் தலைமையிலான மருத்துவ குழுவினர் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்தனர். மேலும் நோய் தடுப்பு முறைகள் குறித்து விளக்கினர். சிறு வயதில் குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும், குற்ற செயல்களில் ஈடுபடும் சிறுவர்-சிறுமிகளை கண்டறிந்து அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்ததும் இந்த கிளப் தொடங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Next Story