ஓசூரில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்-பிரகாஷ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
ஓசூர்:
ஓசூர் 16-வது வார்டுக்குட்பட்ட அரசனட்டியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் முகாம் நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். ஓசூர் மாநகர செயலாளரும், மேயருமான எஸ்.ஏ.சத்யா, ஓசூர் தொகுதி பொறுப்பாளரும், கட்சியின் கொள்கை பரப்பு குழு துணை செயலாளருமான வேலூர் ரமேஷ், மாவட்ட துணை செயலாளர் பி.முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர் கிரீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் துணை மேயர் ஆனந்தய்யா, பொதுக்குழு உறுப்பினர் முனிராஜ், பகுதி செயலாளர்கள் வெங்கடேஷ், ஜி.ராமு, மாநகராட்சி கவுன்சிலர் சென்னீரப்பா மற்றும் கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, மாநகர அவைத்தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். முடிவில், மாநகராட்சி 2-வது மண்டலக்குழு தலைவர் காந்திமதி கண்ணன் நன்றி கூறினார்.