பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
ராமநாதபுரம்
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் போலீஸ் நிலையம் சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு சின்னக்கண்ணு தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் இளவரசன், சப்-இன்ஸ்பெக்டர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுகுளத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் அனைவரையும் வரவேற்றார். இதில் பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த பொதுமக்கள் தாங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகள், புகார்களை மனுக்களாக அளித்தனர். மனுக்களை பெற்று கொண்ட மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு அந்தந்த பகுதி போலீசார் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். இதில் 5 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. இதில் முதுகுளத்தூர் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story