பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம்


பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
x
தினத்தந்தி 10 April 2023 12:15 AM IST (Updated: 10 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே உள்ள வெங்கல குறிச்சி கிராமத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு வெங்கல குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். முதுகுளத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் கதிரவன் முன்னிலை வகித்தார். இதில் குடும்ப அட்டை, ஸ்மார்ட் கார்டு பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தல், தொலைபேசி எண் சேர்த்தல், முகவரி மாற்றம், திருத்தம், புகைப்படம் மாற்றம் உள்ளிட்ட குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்தனர். இதில் வெங்கல குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கிராம பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story