சிறுவர் நாடாளுமன்ற நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம்
சிறுவர் நாடாளுமன்ற நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
ராமநாதபுரம்
திருவாடானை,
திருவாடானை பஸ் நிலையம் அருகே உள்ள இலக்கு மக்கள் மையத்தில் சிவகங்கை மறை மாவட்ட தலித் பணி குழு சார்பில் சிறுவர் நாடாளுமன்ற நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. தலித் பணிக்குழு செயலர் அருட்தந்தை அமல்ராஜ் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற பயிற்சியில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த 44 மாலை நேர கல்வி மையத்திலிருந்து 70-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியர் பிரான்சிஸ், மண்டல தலித் பணி குழு ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதில் சிறுவர் நாடாளுமன்றம் அமைத்தலின் நோக்கம், கிராம வளர்ச்சிகளை மேம்படுத்துவது, மே மாதம் சிறுவர் நாடாளுமன்ற மாநாடு நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
Related Tags :
Next Story