காசநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
காசநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
ராமநாதபுரம்
தொண்டி
திருவாடானை யூனியன் தேளூர் ஊராட்சி பழங்குளம் கிராமத்தில் எச்.ஐ.வி., பால்வினை தொற்று மற்றும் காசநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இம்முகாமை தேளூர் ஊராட்சி தலைவர் அய்யப்பன் தொடங்கி வைத்தார். இதில் 48 பேருக்கு பால்வினை தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. சுமார் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு பால்வினை தொற்று, காசநோய் மற்றும் எச்.ஐ.வி. குறித்த ஆலோசனை, பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
இதில் கலந்து கொண்டவர்களுக்கு மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் கவுன்சிலர் லூர்து மேரி பிரசாத், ஊராட்சி செயலாளர் மாதவன், நம்பிக்கை மைய ஆலோசகர் சாந்தி மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story