ரத்ததான முகாம்
ரத்ததான முகாம்
ராமநாதபுரம்
ராமநாதபுரம் தெற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத் சார்பில் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண்களுக்கான ரத்ததான முகாம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் இப்ராகிம் சாபிர் தலைமை தாங்கினார். செயலாளர் தினாஜ்கான், பொருளாளர் கரீம் ஹக் சாஹிப், துணைத்தலைவர் யாசர் அரபாத், துணை செயலாளர்கள் உஸ்மான், ரஜப்தீன், மீரான், மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் மலர்வண்ணன், டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, ரத்த வங்கி டாக்டர் தங்கபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவ கல்லூரி முதல்வர் செந்தில்குமார் முகாமை தொடங்கி வைத்தார். ரத்ததான முகாமில் ஏராளமான பெண்கள் ரத்ததானம் வழங்கினர். ரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story