கால்பந்து பயிற்சியாளர்களுக்கு முகாம்
கால்பந்து பயிற்சியாளர்களுக்கு முகாம் நடந்தது.
நீலகிரி
கோத்தகிரி,
நீலகிரி மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில், கால்பந்து பயிற்சியாளர்களுக்கு டி சான்றிதழ் பயிற்சி முகாமின் தொடக்க நிகழ்ச்சி கூடலூர் தாளூர் பகுதியில் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் மணி தலைமை தாங்கினார். செயலாளர் மோகனம் முரளி, துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன், துணைச் செயலாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பயிற்சி நேற்று தொடங்கி 6 நாட்கள் நடக்கிறது. இதில் அகில இந்திய கால்பந்து பயிற்சியாளர்கள் தீபக், நாராயணன் மேனன் கலந்துகொண்டு விளையாட்டு துறையின் நுணுக்கங்கள் மற்றும் பல்வேறு திறமைகள் குறித்து பயிற்சி அளித்து வருகின்றனர். இதில் தமிழகத்தில் இருந்து 24 பேர் பங்கு பெற்றுள்ளனர். முகாமில் பயிற்சியாளர் சத்யன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story