மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான முகாம்


தினத்தந்தி 3 April 2023 12:15 AM IST (Updated: 3 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி கோட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான முகாம் திங்கட்கிழமை நடக்கிறது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள எட்டயபுரம், கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் மற்றும் கயத்தாறு தாலுகா அலுவலகங்களிலும், கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை வழங்குவது தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

கோவில்பட்டி கோட்டத்தில் வீடற்ற ஏழை, எளிய மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் அளித்து பயன்பெறலாம்.

இ்ந்த தகவலை கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.


Next Story