திருக்கோவிலூரில்மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்
திருக்கோவிலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நடைபெற்றது.
திருக்கோவிலூர்,
கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி துறை மற்றும் மகளிர் திட்டம் சார்பில் திருக்கோவிலூர் நகராட்சி, ஊராட்சி ஒன்றியத்துடன் இணைந்து மாற்றுத் திறனாளிகள் மற்றும் நலிவுற்றவர்களை தகுதி அடிப்படையில் கண்டறியும் முகாம் திருக்கோவிலூரில் நடைபெற்றது.
இதற்கு திருக்கோவிலூர் நகர மன்ற தலைவர் டி.என்.முருகன் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்து, மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். நகர் மன்ற துணைத் தலைவர் உமாமகேஸ்வரிகுணா, நகர தி.மு.க. அவைத்தலைவர் குணா, நகர வர்த்தகர் சங்க தலைவர் கே.ஏ.ராஜா, நகராட்சி கவுன்சிலர்கள் புவனேஸ்வரிராஜா, சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆணையாளர் கீதா வரவேற்றார். முகாமில் கலந்து கொண்டவர்கள் அரசின் நிதி உதவி, மூன்று சக்கர ஸ்கூட்டர், அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தனர். முகாமில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.