மத்திய அரசை கண்டித்து பிரசார நடைப்பயணம்
எரவாஞ்சேரியில் மத்திய அரசை கண்டித்து பிரசார நடைப்பயணம் நடந்தது.
திருவாரூர்
குடவாசல்:
குடவாசல் ஒன்றியம் ஏரவாஞ்சேரி கடைவீதியில் மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பிரசார நடைப்பயணம் நடந்தது. பிரசார நடைப்பயணத்தை குடவாசல் ஒன்றிய செயலாளர் டேவிட் ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஹம்ராஜா நடைப்பயணத்தை தொடங்கி வைத்து மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து விளக்கி பேசினார். பொதுமக்களிடம் கட்சி தொண்டர்கள் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்தனர். நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர் சுதாகர், விவசாயிகள் சங்க செயலாளர் முருகானந்தம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சின்னையன், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story