கரூரில் கற்பூரவள்ளி தார் ரூ.650-க்கு ஏலம்


கரூரில் கற்பூரவள்ளி தார் ரூ.650-க்கு ஏலம்
x

வரத்து குறைவால் கரூரில் கற்பூரவள்ளி தார் ரூ.650-க்கு ஏலம் போனது.

கரூர்

கரூர் ரெயில் நிலையம் அருகே வாழை மண்டி செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் கரூர் மாவட்டத்திற்குட்பட்ட லாலாபேட்டை, மாயனூர், கிருஷ்ணராயபுரம், வாங்கல், நாமக்கல் மாவட்டம் மோகனூர், காட்டுப்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூவன், ரஸ்தாளி, கற்பூரவள்ளி உள்ளிட்ட வாழைத்தார்கள் மற்றும் ஈரோடு மாவட்டம் கோபி மற்றும் வேலூர், தேனி, போடி ஆகிய பகுதிகளில் இருந்து மோரிஸ், செவ்வாழை வாழைத்தார்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்படுகிறது. இதனை கரூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வரும் வியாபாரிகள் ஏலம் எடுத்து வாங்கி செல்கின்றனர்.

இந்தநிலையில் கரூர் வாழைமண்டிக்கு வாழைத்தார் வரத்து குறைந்துள்ளதால், விலையும் அதிகரித்து உள்ளது. நேற்று வியாபாரிகள் தங்களுக்கு தேவையான வாழைத்தார்களை ஏலம் மூலம் வாங்கி சென்றனர். இதில் கற்பூரவள்ளி தார் ரூ.650-க்கும், பூவன் ரூ.650-க்கும், ரஸ்தாளி ரூ.600-க்கும், பச்சநாடான் ரூ.600-க்கும், செவ்வாழை ஒரு பழம் ரூ.10-க்கும் ஏலம் போனது. கடந்த மாதத்தை விட வாழைத்தார்கள் விலை இருமடங்காக அதிகரித்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story