பட்டுக்கோட்டையில் தயார் நிலையில் 11 நிவாரண முகாம்கள்


பட்டுக்கோட்டையில் தயார் நிலையில்  11 நிவாரண முகாம்கள்
x

பட்டுக்கோட்டை தாலுகாவில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை தாலுகாவில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தொடர் மழை

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தஞ்சை மாவட்டத்தில் ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் பேரில் பட்டுக்கோட்டை தாலுகாவில் உள்ள கடலோரப் பகுதிகளில் புயல் மற்றும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடைவடிக்கையாக 11 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நிவாரண முகாம்கள்

தம்பிக்கோட்டை வடகாடு- ஊராட்சி மன்ற கூட்ட அரங்கு, தம்பிக்கோட்டை மேலக்காடு- ஊராட்சி மன்ற கூட்ட அரங்கு, தம்பிக்கோட்டை மறவக்காடு- ஊராட்சி கூட்ட அரங்கு, தாமரங்கோட்டை தெற்கு- கரிசக்காடு பள்ளிக்கூடம், பழஞ்சூர்-நரசிங்கபுரம் பள்ளி, அதிராம்பட்டினம்-கரையூர் தெரு பள்ளி, ஏரிப்புறக்கரை-ஊராட்சி மன்ற அலுவலக கூட்ட அரங்கு, ராஜாமடம்-கீழத்தோட்டம் பள்ளி.கொள்ளுக்காடு-ஊராட்சி மன்ற கூட்ட அரங்கு, புதுப்பட்டினம்-ஊராட்சி ஒன்றிய பள்ளி. கள்ளி வயல்-மல்லிப்பட்டினம் ஊராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேவையான உதவிகள்

பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் பிரபாகர் தலைமையில் தாசில்தார், துணை தாசில்தார்கள், வேளாண்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் தொடர்ந்து முகாம்களை கவனித்து தேவையான உதவிகளை செய்து வருவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story