பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக தேர்வு


பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக தேர்வு
x
தினத்தந்தி 30 Jan 2023 12:15 AM IST (Updated: 30 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக தேர்வு நடந்தது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் எம்.எஸ்.பி.வேலாயுத நாடார் லட்சுமி தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் - எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான வளாக தேர்வு நடைபெற்றது.

யுனிவெர்ஸ் கன்ட்ரோல் ஆட்டோமேஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிரேம்குமார் மற்றும் நிறுவனத்தின் மேலாளர் சரவணன் ஆகியோர் மாணவர்களை தேர்வு செய்தனர். நேர்முக தேர்வில் 63 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

தேர்வு பெற்ற மாணவர்களை கல்லூரியின் தாளாளர் எம்.எஸ்.பி.காளியப்பன், ஆலோசகர் பாலசுப்பிரமணியன், முதல்வர் ரமேஷ், அனைத்து துறைத்தலைவர்கள், வேலைவாய்ப்பு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டினர். வளாக தேர்விற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் மணிராஜ் மற்றும் அனைத்து துறைத்தலைவர்களும் செய்திருந்தனர்.


Next Story