துர்நாற்றம் வீசி வரும் செத்தக்குளம் சுத்தம் செய்யப்படுமா?


துர்நாற்றம் வீசி வரும் செத்தக்குளம் சுத்தம் செய்யப்படுமா?
x

துர்நாற்றம் வீசி வரும் செத்தக்குளம் சுத்தம் செய்யப்படுமா?

திருவாரூர்

கூத்தாநல்லூர் அருகே துர்நாற்றம் வீசி வரும் செத்தக்குளத்தை சுத்தம் செய்ய வேண்டு்ம் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செத்தக்குளம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள சேகரை கிராமத்தில் செத்தக்குளம் உள்ளது. இந்த குளம் 20 ஆண்டுகளுக்கு முன்பு முறையாக பராமரிக்கப்பட்டு வெண்ணாற்றில் இருந்து வரும் தண்ணீரை குளத்திற்கு செல்லும் வாய்க்கால் வழியாக கொண்டு சென்று குளத்தில் நிரப்பி தேக்கி வைத்து குளிப்பதற்கும், ஆடைகள் துவைப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர். இதனால் நாளடைவில் குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகள் அதிகரித்தது.

பின்னர் குளம் முறையாக பராமரிப்பு அற்ற நிலைக்கு மாறியது. குளத்தை சுற்றிலும் மற்றும் குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் வாய்க்கால் ஆக்கிரமிப்பில் சிக்கியது. அதன்பிறகு, குளத்திற்கு தண்ணீர் செல்லவும், சென்ற தண்ணீர் வெளியேறவும் வழியின்றி போனது.

மழை நீர் தேங்கி நிற்கும் அவலம்

அதனால் இந்த குளத்தில் கடந்த 15 ஆண்டுகளாக மழை பெய்த தண்ணீர் மட்டுமே தேங்கி நிற்கும் அவல நிலை உள்ளது. 15 ஆண்டுகளாக குளத்தில் ஒரே மாதிரியான தண்ணீர் மற்றும் சாக்கடை தண்ணீர் குளத்தில் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசும் குளமாகவே இருந்து வருகிறது.

குளம் முழுவதும் அழுகிய நிலையில் வெங்காய தாமரை மற்றும் கோரை நார் செடிகளும் குளம் இருக்கும் இடம் தெரியாத அளவிற்கு குளத்தையே மூடி மறைத்துக்கொண்டு உள்ளது.

சுத்தம் செய்ய வேண்டும்

குளம் துர்நாற்றம் வீசுவதால் நாளுக்கு நாள் கொசு உற்பத்தி அதிகரித்து நோய் தொற்றும், சுகாதார கேடும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துர்நாற்றம் வீசி வரும் செத்தக்குளத்தை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும். மேலும் வாய்க்காலை முழுமையாக தூர்வாரி சீரமைப்பு செய்து தர வேண்டும் என்று கிராம மக்கள் எதிர் பார்க்கின்றனர்.


Next Story