கிராமங்களுக்கு சென்று காசநோயாளிகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்


கிராமங்களுக்கு சென்று காசநோயாளிகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்
x

நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மூலம் கிராமங்களுக்கு சென்று காசநோயாளிகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும் என்று திருவாரூர் மாவட்ட கலெக்டா் சாருஸ்ரீ கூறினாா்.

திருவாரூர்


நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மூலம் கிராமங்களுக்கு சென்று காசநோயாளிகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும் என்று திருவாரூர் மாவட்ட கலெக்டா் சாருஸ்ரீ கூறினாா்.

எக்ஸ்ரே வாகனம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டத்தின் கீழ் மக்களைத் தேடி மருத்துவம் நடமாடும் எக்ஸ்ரே வாகனத்தை கலெக்டர் சாருஸ்ரீ கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் நடமாடும் வாகனத்தின் உள்ளே சென்று பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

காசநோய் இல்லா தமிழகம் 2025-யை முன்னிட்டு கடந்த ஜூலை மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் அனைத்து மாவட்டங்களுக்கும் நடமாடும் எக்ஸ்ரே வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இதன்தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டத்தில் நேற்று நடமாடும் எக்ஸ்ரே வாகனம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

பரிசோதனை

இந்த வாகனம் மூலம் சர்க்கரை நோயாளிகள், முதியோர், எச்.ஐ.வி. நோயாளிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள அனைவரும் எக்ஸ்ரே பரிசோதனை செய்து காசநோய் உள்ளதா என கண்டறிந்து பயன்பெற முடியும்.

மேலும், காசநோயாளிகளை அவர்களின் ஊருக்கு சென்று எளிதில் கண்டறிந்து அவர்களுக்கான சிகிச்சை அளிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினாா். நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, துணை இயக்குனர் மருத்துவ பணிகள் புகழ், துணை இயக்குனர் சுகாதார பணிகள் ஹேமசந்த் காந்தி, துணை இயக்குனர் மருத்துவ பணிகள் (குடும்ப நலம்) உமா சந்திரசேகரன், காசநோய் பிரிவு மருத்துவ அலுவலர் சுபாஷினி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், காசநோய் பிரிவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story