பயணிகள் நிழலகத்தில் போஸ்டர் ஒட்டுவது தடுக்கப்படுமா?
பயணிகள் நிழலகத்தில் போஸ்டர் ஒட்டுவது தடுக்கப்படுமா?
மயிலாடுதுறை
சீர்காழி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகள் தோறும் மாணவர்கள், மகளிர் மற்றும் பொதுமக்கள் பஸ்களில் செல்லும் முன்பு அவர்கள் காத்திருப்பதற்காக சாலை ஓரங்களில் பயணிகள் நிழலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகள் அந்த நிழலகத்தில் காத்திருந்து பஸ்களில் பயணம் செய்து வருகின்றனர். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பயணிகள் நிழலகத்தில் சமீப காலமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அந்த இடங்களின் அழகை கெடுக்கும் விதமாக உள்ளது. மேலும் அந்த நிழலகங்களில் ஆபாச போஸ்டர்கள் ஒட்டப்படுவதால், பொதுமக்கள் முகம் சுழிக்கும் நிலை உள்ளது. எனவே பயணிகள் நிழலகத்தை சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மூலம் அடிக்கடி தூய்மை செய்து பராமரிப்பு பணிகளை செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story