கீழடி அருங்காட்சியகத்தில் சூர்யா-ஜோதிகா விதி மீறலா?-தென் மண்டல போலீஸ் ஐ.ஜி.யிடம் பா.ஜனதா புகார்


கீழடி அருங்காட்சியகத்தில்  சூர்யா-ஜோதிகா விதி மீறலா?-தென் மண்டல போலீஸ் ஐ.ஜி.யிடம் பா.ஜனதா புகார்
x

கீழடி அருங்காட்சியகத்தில் சூர்யா-ஜோதிகா விதி மீறியதாக தென் மண்டல போலீஸ் ஐ.ஜி.யிடம் பா.ஜனதா சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

மதுரை


சிவகங்கை மாவட்டம் கீழடியில் அமைந்துள்ள தொல்பொருள் அருங்காட்சியகத்திற்குள் மதுரை எம்.பி. வெங்கடேசன், நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, ஜோதிகா குடும்பத்தினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றனர். அப்போது அங்கு விதிமுறைகள் மீறப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அருங்காட்சியகத்தை மத்திய அரசின் தொல்லியல் துறையின் கீழ் ஒப்படைக்கக்கோரி தென் மண்டல போலீஸ் ஐ.ஜி.யிடம் பா.ஜனதா சார்பில் மனு கொடுக்க வந்தனர். பின்னர், மதுரை பா.ஜ.க மாநகர் மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன் தலைமையில் வக்கீல். முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள் சாம்சரவணன், விஸ்வநாதன், பாஸ்கர், சரண்யா ஆகியோர் சென்று ஐ.ஜி. அஸ்ராகார்க்கை சந்தித்து மனு கொடுத்தனர்.


Next Story