குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை அகற்றப்படுமா?


குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை அகற்றப்படுமா?
x

கூத்தாநல்லூர் அருகே குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

குளத்தை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை

கூத்தாநல்லூர் அருகே உள்ளது சேகரை கிராமம். இந்த கிராமத்தையொட்டி மாரியம்மன் கோவில் எதிரே உள்ளது செத்தைகுளம். இந்த குளத்தினை அப்பகுதி கிராம மக்கள் குளிப்பதற்கும், ஆடைகள் துவைப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர். இந்த குளத்தில் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகாயத்தாமரை செடிகள் அதிக அளவில் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது.

தண்ணீரே தெரியாதப்படி குளத்தை ஆகாயத்தாமரை செடிகள் ஆத்திரமித்துள்ளன.மேலும் கோரை நார் செடிகளும் குளத்தின் கரையோரங்களில் நான்கு புறமும் அடர்ந்து படர்ந்துள்ளது. இதனால் குளத்தில் தண்ணீர் மாசடைந்துள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

துர்நாற்றம்

குளத்திற்கு தண்ணீர் வரவும், வெளியேற்றவும் உள்ள வாய்க்கால் இருக்கும் இடம் தெரியாமல் மேடாகி விட்டது. இதன் காரணமாக கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக குளத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்ற முடியாமல் அசுத்தமாக மாறி வருகிறது.

குளத்தில் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகள் அழுகி உள்ளதாலும், அசுத்தமான தண்ணீராலும் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதில் கொசு உற்பத்தியாக அந்த பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

முழுமையாக அகற்றி தூர்வார வேண்டும்

இந்த குளத்தின் அருகே வீடுகள், அரசு பள்ளி, வழிபாட்டு தலங்கள் உள்ளன. துர்நாற்றம் வீசும் ஆகாயத்தாமரை செடிகள் உள்ள குளத்தால் சுகாதார சீர் கேடு ஏற்படும் என்பதை கருத்தில் கொள்ளாமல், இதுவரை ஆகாயத்தாமரை அகற்றப்படாமல் உள்ளது வேதனை அளிக்கிறது என அந்த கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை முழுமையாக அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Next Story