வழிகாட்டுதல் பலகையில் உள்ள தவறு திருத்தப்படுமா?


வழிகாட்டுதல் பலகையில் உள்ள தவறு திருத்தப்படுமா?
x

வழிகாட்டுதல் பலகையில் உள்ள தவறை திருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர்


விருதுநகரில் நெடுஞ்சாலை துறையினர் மதுரை ரோட்டில் நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு சாத்தூர் ரோடு சந்திப்பில் எம்.ஜி.ஆர். சிலை அருகில் பராசக்தி மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் வழிகாட்டுதல் பலகை வைத்துள்ளனர். பராசக்தி என்று குறிப்பிடுவதற்கு பதிலாக பாரசக்தி என்று தவறுதலாக குறிப்பிட்டுள்ளனர். அரசு துறையின் சார்பில் வைக்கப்பட்டுள்ள இந்த வழிகாட்டுதல் பலகையில் இவ்வாறு தவறாக குறிப்பிடப்பட்டு இருப்பது வேதனை அளிக்கும் விஷயமாக உள்ளது. எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட துறையினர் இதனை திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story