இளம்பெண் கடத்தலா? போலீசார் விசாரணை


இளம்பெண் கடத்தலா? போலீசார் விசாரணை
x

இளம்பெண் கடத்தப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தினர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் மேலூர் நடுத்தெருவை சேர்ந்தவர் பழனிமுத்து. இவருடைய மகள் ஜனனி (வயது 22). இவர் ஐ.டி.ஐ. படித்துவிட்டு நெய்வேலி என்.எல்.சி.யில் தொழில் பழகுனராக பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த ஐனனி நேற்று முன்தினம் திடீரென மாயமானார். இதுகுறித்து அவருடைய பெற்றோர் அளித்த புகாரின்பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை யாரேனும் கடத்தி சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story