கிராம நிர்வாக அதிகாரி கடத்தலா?
வேடசந்தூர் அருகே கிராம நிர்வாக அதிகாரி கடத்தப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்
வேடசந்தூர் அருகே உள்ள நாககோனானூரை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 35). இவர், வே.புதுக்கோட்டை ஊராட்சியில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கடந்த 20-ந் தேதி இரவு இவர், கொசவப் பட்டி அருகே தான் புதிதாக கட்டுகிற வீட்டை பார்த்து விட்டு வருவதாக கூறி வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனில் தொடர்பு கொண்டபோது அது 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில், அவரது மனைவி சங்மா நேற்று புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்துள்ளார். இதற்கிடையே மகேஸ்வரனின் மோட்டார் சைக்கிள், அவர் புதிதாக கட்டுகிற வீட்டின் அருகே நின்றது. இதனால் அவரை யாரேனும் மர்ம நபர்கள் கடத்தி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story