புகையிலை பொருட்களுக்கான தடை உத்தரவு ரத்து - சென்னை ஐகோர்ட்டு அதிரடி


புகையிலை பொருட்களுக்கான தடை உத்தரவு ரத்து - சென்னை ஐகோர்ட்டு அதிரடி
x

புகையிலை பொருட்களுக்கு தடை விதித்த பாதுகாப்பு ஆணையரின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீது ஐகோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.

இந்த நிலையில் உணவு பாதுகாப்பு ஆணையரின் உத்தரவை எதிர்த்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், உணவு பாதுகாப்பு சட்டத்தில் புகையிலை பொருட்களுக்கு தடை விதித்த பாதுகாப்பு ஆணையரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இதுபோன்று தடை உத்தரவை மீறியதாக எடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டத்தில் புகையிலை பொருட்களுக்கு முழு தடை விதிக்கவில்லை எனவும் ஐகோர்ட்டு குறிப்பிட்டுள்ளது.


Next Story